×

அலுவலகத்திற்கு சென்று கணவரை திட்டுவதும் கொடுமை செய்வது தான் விவகாரத்து தந்தது சட்டீஸ்கர் கோர்ட்

பிலாஸ்பூர்: சட்டீஸ்கரின் தம்தாரி மாவட்டத்தை சேர்ந்தவர் 32வயது நபர். இவர் கடந்த 2010ம் ஆண்டு விதவை பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து தனது மனைவி தன்னை மோசமாக நடத்துவதாகவும், பெற்றோரை சந்திக்கவிடாமல் தடுப்பதாகவும் கூறி ராய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார். தனது மனைவியிடம் இருந்து தனக்கு விவகாரத்து வேண்டும் என்று கடந்த 2019ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கணவர் தாக்கல் செய்த அறிக்கைகள்,ஆதாரங்கள் அடிப்படையில் விவகாரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அந்த பெண் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு  விசாரணையின்போது மனைவி தனது அலுவலகத்துக்கு வந்து மோசமான வார்த்தைகளால் தன்னை திட்டி சக ஊழியர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், சக பெண் ஊழியருடன் தொடர்பில் இருப்பதாகவும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அமைச்சருக்கு பொய் புகார் கடிதம் எழுதியதையும் கணவர் தரப்பில் ஆதாரத்துடன் விளக்கமளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, ‘‘பணியிடத்துக்கு சென்று அவரை தகாத வார்த்தையால் திட்டுவது மேலும் அவரது உறவுகளை குற்றம்சாட்டுவது போன்றவை சக ஊழியர்கள் முன் கணவரின் மரியாதையை குறைத்துவிடும். அலுவலக அந்தஸ்து குறைந்துவிடும். மாமியாரை துஷ்பிரயோகம் செய்தது, பெற்றோரை சந்திக்க விடாமல் தடுத்ததும் கொடுமை செய்வதற்கு சமமாகும். எனவே குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறோம்’’ என்று கூறி தீர்ப்பளித்தனர்.


Tags : Chattisgarh Court , The Chattisgarh Court gave the matter of going to the office and cursing the husband
× RELATED அலுவலகத்திற்கு சென்று கணவரை...