×

த்ரிஷ்யம் 3-ம் பாகம்; உறுதிப்படுத்திய மோகன்லால்

திருவனந்தபுரம்: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் 2013ம் ஆண்டு வெளியானது. பேமிலி த்ரில்லர் பாணியில் உருவான இந்த படத்தில் மீனா, எஸ்தர் அலி, ஆஷா சரத், அன்சிபா ஹசன் நடித்திருந்தார்கள். கேரளாவில் முதன் முறையாக 100 கோடி வசூலித்த படம் இது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ரீமேக் ஆனது. அதற்கு பிறகு இந்த படத்தின் 2ம் பாகம் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் தவிர மற்ற மொழிகளில் ரீமேக் ஆனது. இந்த படத்திலும் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடித்திருந்தார்கள். இரு பாகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இதன் 3ம் பாகத்துக்கு நிறைய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டது.

ஆனால் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் அந்தாக்‌ஷரி, டுவல்த்மேன், ரம் உள்ளிட்ட வேறு படங்களில் பிசியாகி விட்டதால் த்ரிஷ்யம் 3ம் பாகம் இப்போதைக்கு இல்லை என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது த்ரிஷ்யம் படத்தின் 3ம் பாகம் தயாராக இருப்பதை மோகன்லால் தனது டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகை எஸ்தரும் த்ரிஷ்யம் குடும்பம் மீண்டும் வருகிறது என்று டிவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில் த்ரிஷ்யம் 3ம் பாகம் பற்றி மறைமுகமாக தெரிவித்திருந்தார். தற்போது மோகன்லால் அதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

Tags : Mohanlal , Drishyam Part 3; Confirmed by Mohanlal
× RELATED ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில்,...