×

பொன்னியின் செல்வன் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் லீக்

சென்னை: பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ‘பொன்னியின்  செல்வன்’. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர்  நடித்து இருக்கிறார்கள். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து இரண்டு பாடல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் செப்டம்பர் 6ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. அதுபோல், செப்டம்பர் முதல் வாரத்தில் தெலுங்கு பதிப்புக்கான டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. படம் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தின் முக்கிய கேரக்டர்களுக்கான பர்ஸ்ட் லுக் முன்பே வெளியிடப்பட்டது. அதே நேரம், ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக் கள் இணையதளங்களில் நேற்று முதல் வைரலாகி வருகின்றன. இவற்றில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உள்பட டெக்னீஷியன்கள் பலர் உள்ளனர். இதுபோல் ஐந்தாறு படங்கள் வெளியாகியுள்ளன. இதைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘இந்த போட்டோக்களை நாங்கள் வெளியிடவில்லை. யாரோ திட்டமிட்டு வெளியே கசியவிட்டுள்ளனர்’ என்று படக்குழு புகார் கூறியுள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியாவதற்கு முன்பே டீசரும் லீக் ஆகியிருந்தது. இதுதொடர்பாக விசாரித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



Tags : Ponni ,Selvan , Ponni's Selvan shooting spot images league
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்