×

ஜி.யு.போப் குறித்த ஆளுநரின் பேச்சு உள்நோக்கம் கொண்டது: எஸ்.டி.பி.ஐ.கட்சி கண்டனம்

சென்னை: ஜி.யு.போப் குறித்து தமிழக ஆளுநரின் பேச்சுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை:  தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தனது கல்லறையின் மீது ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று செதுக்கப்படவேண்டும் என்று ஜி.யு.போப் கேட்டுக்கொண்டார்.  வாக்குவங்கி அரசியலுக்காக  திருக்குறளை, தமிழை புகழ்வது போல் பேசுவதும், தமிழகத்தை கடந்தால் சமஸ்கிருதம் தான் உயர்ந்த மொழி என பேசுவதும், ஹிந்தி மொழியை திணிப்பதுமான கொள்கை கொண்டவர்களுக்கு மத்தியில், தமிழை நேசித்து, அதனை கற்றதோடு மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களை உலகறியச் செய்த ஜி.யு.போப்பின் பணி என்பது மகத்தானது. ஜி.யு.போப் குறித்து தமிழக ஆளுநரின் பேச்சு தவறானது; மட்டுமின்றி உள்நோக்கம் கொண்டது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Governor ,GU ,Pope ,SDPI , GU Pope, Governor's Speech, SDPI Party Condemnation
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...