×

தாய்லாந்து பிரதமர் பிரயுத் பதவி பறிப்பு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாங்காக்: தாய்லாந்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவ சதியின் மூலம் கவிழ்த்து பிரயுத் சான் ஒச்சா ஆட்சியை பிடித்தார். இவர் தனது பதவிக்கால வரம்பை மீறி பதவியில் நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான மனுவை அரசியலமைப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில், 5 நீதிபதிகளில் 4 பேர், பிரதமர் பிரயுத் தனது பதவி வரம்பு விதியை மீறியதாகவும், எனவே அவர் தனது பணியை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிட்டனர். இதனால் துணை பிரதமருமான பிரவீத் வோங்சுவான் காபந்து பிரதமராக செயல்படுவார் என தெரிகிறது. இவர் தான், ராணுவ சதியின் மூலம் பிரயுத்தை பிரதமர் பதவியில் அமர வைத்தவர். பிரதமர் பிரயுத் வசம் இருக்கும் பாதுகாப்பு அமைச்சக பதவியையும் 15 நாட்களுக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Prayuth , Thai Prime Minister Prayuth was stripped of his post: the court's verdict
× RELATED பிரதமர் பிரயுத் சான் பதவியில் நீடிக்கலாம்: தாய்லாந்து நீதிமன்றம் அதிரடி