×

தமிழக காவல் துறையில் காவலர்களை தொடர்ந்து எஸ்ஐக்களுக்கும் விடுமுறை அறிவிப்பு: அரசு அதிரடி உத்தரவு

சென்னை: தமிழக காவல் துறையில் காவலர்களை தொடர்ந்து, தற்போது உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை அளித்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல். காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை வார விடுமுறை இன்றி இரவு பகலாக பணியாற்றுகின்றனர். இதனால் காவல் துறையில் பணியாற்றும் பலர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை வார விடுமுறை அளிக்கப்படும் என்று கடந்த 10.5.2022ல் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதைதொடர்ந்து காவல்துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலை காவலர்கள், முதல் நிலை காவலர்கள், தலைமை காவலர்கள் என அனைவருக்கும் வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த நடைமுறையை பின்பற்றி தற்போது தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி காவல் துறையில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை வார விடுப்பு வழங்கி அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையால் தமிழகம் முழுவதும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 10,508 போ பயனடைவார்கள். இந்த நடைமுறையை அனைத்து காவல் துறை அதிகாரிகளும் பின்பற்றி அரசாணைப்படி உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Police Department ,SIs , Tamil Nadu Police Department, SIs also on holiday, government action order
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...