சூர்யா, அபர்ணா, ஜி.வி.பிரகாஷ் உள்பட தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் பாராட்டு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 6வது செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அப்போது கடந்த 2020ம் ஆண்டுக்கான  தேசிய விருது பெற தேர்வு செய்யப்பட்ட  கலைஞர்கள் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, திரைக்கதை ஆசிரியர் சுதா கொங்கரா, நடிகைகள் அபர்ணா பால

முரளி, லட்சுமிப்பிரியா சந்திர மவுலி, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், எடிட்டர் கர் பிரசாத், இயக்குனர்கள் வசந்த், மடோன் அஸ்வின், ஆர்.வி.ரமணி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

அவர்களை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விருது பெற்ற அனைவரும் நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்தனர். முடிவில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக,‘விருமன்’படக்குழு சார்பில் 25 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இதை கார்த்தி,‘விருமன்’படத் தயாரிப்பாளர் சூர்யா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர சுந்தரபாண் டியன் இணைந்து காசோலை மூலமாக வழங்கினர்.

Related Stories: