×

மப்பேடு பகுதியில் போதைப் பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்; ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர்: மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி செபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில் மப்பேடு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் போலீசார் மப்பேடு, சமத்துவபுரம், தொடுகாடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது சமத்துவபுரத்தில் உள்ள கடையில் சோதனை செய்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது மப்பேடு அடுத்த காந்திப்பேட்டை, உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (58) என்பது தெரியவந்தது. இதனையடுத்து விற்பனைக்காக வைத்திருந்த ஹான்ஸ் 45 பாக்கெட்டுகளும், விமல் பான் மசாலா 60ம், வி 1 பாக்கு 171ம், ஆர்எம்டி பான் மசாலா 49ம், உமா பொடி 28ம் டிஎஸ் பாக்கு 55ம், ஸ்வாகத் கோட்டு 13ம் பறிமுதல் செய்தனர்.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக முனுசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மப்பேடு சமத்துவபுரம் பெருமாள் கோயில் தெருவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த வெங்கடசாமியின் மகன் ரமேஷ் (37) என்பவரையும் கைது செய்தனர். விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த ஹான்ஸ் 45ம், விமல் பான் மசாலா 65ம், கூலிப் 7ம், எம்டிஎம்.20ம், வி 1 பாக்கு 70ம், ஸ்வாகத் 66ம் பறிமுதல் செய்தனர். அதே கடையில் 180 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட 58 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்டபகுதியில் போலீசாரின் அதிரடி சோதனையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Mapedu , 2 people caught selling drugs in Mapedu area; Goods worth Rs.1 lakh seized
× RELATED வேலைக்கு செல்லாததால் ஆத்திரம்...