ரக்‌ஷா பந்தன் நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில் ரக்ஷா பந்தனையொட்டி ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, அமைதியும், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் நாளையொட்டி, சகோதர உணர்வை பேணிக்காக்கும் வகையில் ராக்கி கயிறு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் நிர்வாகி அகிலா தலைமையில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பி சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ராக்கி கயிறு கட்டி இனிப்புகளை வழங்கி ரக்‌ஷா பந்தன் கொண்டாடினார்கள்.

Related Stories: