அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு: மழையால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு இழப்பீடு

சென்னை: தென்மேற்கு பருவ மழையினால் பாதிக்கப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு, நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெல் போன்ற வேளாண் பயிர்களுக்கும் மற்றும் வாழை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கும், தற்போது பெய்து வரும் அதிக பருவமழை போன்ற இயற்கை இடர்பாடுகளினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கடந்த ஆண்டை போலவே வழங்கப்படும்.

மாவட்டங்களில் பயிர் சேதம் குறித்து தொடர்ந்து கணக்கெடுப்பு  நடந்து வருகிறது. நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படவுள்ள சம்பா மற்றும் மானாவரி குளிர்கால(ராபி) பருவ பயிர்களை பயிர் காப்பீடு செய்திட பயிர் காப்பீட்டு கட்டண தொகையில் மாநில அரசின் பங்குத் தொகையாக ரூ.2057.25 கோடி நிதியை அனுமதித்து தமிழ்நாடு அரசு உத்தரவும் வெளியிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: