×

கருமுட்டை விவகாரம்.: தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகள் இன்று வேலைநிறுத்தம்

ஈரோடு: கருமுட்டை விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மூடப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில்,  தனியார் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்தும், ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பேசும் பொருளாக மாறியது.

இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விதிமீறல் இருப்பதை உறுதி செய்தல் மட்டுமே மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும் எனவும், பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்களை தெரிவிக்கப்பட வில்லை எனக் கூறி, தமிழக அரசின் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தனி நீதிபதி புறக்கணித்திருக்க கூடாது எனக் கூறிய, மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில், தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

Tags : Erod , Ovum issue: 250 private hospitals to go on strike today protesting sealing of private hospital
× RELATED ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்...