×

நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை....

சென்னை : சென்னை நேரு உள்விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த செந்தில் குமார். அவர் இன்று காலையில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார். அப்போது அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் துப்பாக்கியை வைத்து கொண்டு  தலையில் சுட்டதாகவும் தலைக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த காவலர் உடலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் ஆயுதபடை காவலர் என்பதையும், அவர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரக்கூடிய நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் பாதுகாப்பு பணியில் அவர் தொடர்ந்து இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் பாதுகாப்பு பணியில் இருந்து வந்ததால் பணிச்சுமை காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலா அல்லது வேறேது தனிப்பட்ட காரணங்களால் இந்த முடிவை அவர் எடுத்தாரா என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்கள். மேலும், அங்கு நடந்தது என்ன என்பது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவும், அவருடன் பணியில் இருந்த காவலர்களிடமும் விசாரிக்க காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். இதனால் அங்கு பணியில் இருந்த சகா ஊழியர்கள் அனைவரும் நேரு உள்விளையாட்டு அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையும், காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து இந்த விவகாரம் குறித்து விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.   



Tags : Nehru Indoor Stadium , Nehru intramural, arena, mission, guard, gun, suicide
× RELATED பிரைம் வாலிபால் லீக் தொடர் இறுதி...