×

பிரைம் வாலிபால் லீக் தொடர் இறுதி போட்டியில் இன்று காலிக்கட் – டெல்லி மோதல்

சென்னை: பிரைம் வாலிபால் லீக் தொடரின் 3வது சீசன் பைனலில் காலிக்கட் ஹீரோஸ் – டெல்லி டூஃபான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த தொடரில், மொத்தம் 9 அணிகள் லீக் சுற்றில் மோதின. இந்த சுற்றின் முடிவில் முதல் 5 இடங்களைப் பிடித்த அணிகள் ‘சூப்பர் 5’ சுற்றில் பலப்பரீட்சை நடத்தின. லீக் சுற்று மற்றும் சூப்பர் 5 சுற்றில் அபாரமாக செயல்பட்டு முதலிடம் பிடித்த காலிக்கட் ஹீரோஸ் அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது.

சூப்பர் 5 சுற்றில் 2வது மற்றும் 3வது இடங்களைப் பிடித்த டெல்லி டூஃபான்ஸ் – அகமதாபாத் டிபெண்டர்ஸ் அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் மோதின. அந்த போட்டியில் 3-2 என்ற செட் கணக்கில் போராடி வென்ற டெல்லி டூஃபான்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில் காலிக்கட் ஹீரோஸ் – டெல்லி டூஃபான்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நேரு உள்ளரங்கில் நடைபெற உள்ள இந்த போட்டி, மாலை 6.30க்கு தொடங்குகிறது. நேரடி ஒளிபரப்பு: சோனி ஸ்போர்ட்ஸ்.

 

The post பிரைம் வாலிபால் லீக் தொடர் இறுதி போட்டியில் இன்று காலிக்கட் – டெல்லி மோதல் appeared first on Dinakaran.

Tags : Calicut-Delhi ,Prime Volleyball League ,CHENNAI ,Calicut Heroes ,Delhi Dufans ,Nehru Indoor Stadium ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...