ஜகன் மோகினி படத்தில் நடித்த காமெடி நடிகர் கடலி ஜெயசாரதி காலமானார்

ஐதராபாத்: பல்வேறு மொழிகளில் 370க்கும் மேறபடங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் கடலி ஜெயசாரதி (83), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். 1961ல் ‘சீதாராம கல்யாணம்’ படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து ‘ஜகன் மோகினி’, ‘பக்த கண்ணப்பா’, ‘டிரைவர் ராமுடு’, ‘குடாச்சாரி நம்பர் 1’, ‘மன உரி பாண்டவுலு’, ‘பரமானந்தையா சிஷ்யுலக கதை’ உள்பட பல தெலுங்கு படங்களில் நடித்தார்.  தவிர, தெலுங்கில் ‘தர்மத்மது’, ‘அக்கிராஜு’,ஸ்ரீராமச்சந்திரடு’ ஆகிய படங்களை கிருஷ்ணம் ராஜுவுடன் இணைந்து தயாரித்தார். தெலுங்கு படவுலகை  சென்னையில் இருந்து  ஐதராபாத்துக்கு மாற்றியதில் தீவிர  பங்காற்றிய அவர், ஆந்திர திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின்  நிறுவன பொருளாளராகவும் பணியாற்றினார்.

Related Stories: