ராமேஸ்வரம்: அப்துல் கலாமின் 7வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் கலெக்டர், குடும்பத்தினர், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 7வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து ராமேஸ்வரம் பேக்கரும்பு நினைவிடத்திலுள்ள கலாமின் சமாதி பட்டு துணி போர்த்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ேநற்று காலை அப்துல் கலாமின் குடும்பத்தினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ், ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் உட்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தனர். இதனைத் தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
