பல்வேறு சம்பவங்களில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை: சென்னை காவல் துறையில் சிறப்பாக செயல்படும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயசுதா, தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவுசல்யா, நீதிமன்ற அலுவல் பணிபுரியும் முதல்நிலை காவலர் ஷோபனா, பூக்கடை உதவி ஆணையர் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பொன்பாண்டியன், தலைமை காவலர் சார்லஸ்,  முதல்நிலை காவலர் செந்தில்குமார், இரண்டாம்நிலை காவலர் சுகுமார், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் சுகுமாறன், தேனாம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்ராஜ், தலைமை காவலர் பொன்னுவேல், ராயப்பேட்டை காவல் நிலைய தலைமை காவலர் சிவபாண்டியன், முதல்நிலை காவலர் அருண்பாண்டியன்,  காவலர் மகேஷ் ஆகிய 13 காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டி, பரிசு வழங்கினார்.

Related Stories: