×

எரி சாராயம் கடத்திய டேங்கர் லாரி ஏலம்

செங்கல்பட்டு:  எரி சாராயம் கடத்திய டேங்கர் லாரி ஏலம் விடப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி சுகுணா சிங் விடுத்திருக்கும் அறிக்கை: ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார்  கடந்த  17.5.2022 அன்று டாங்கர் லாரியில் கடத்திவரப்பட்ட 27,000 லிட்டர் எரிசாராயத்தினை வண்டியை மடக்கி  பறிமுதல் செய்யப்பட்டது.   இதை, செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி மைதானத்தில் 25.7.2022 அன்று பிற்பகல் 2 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளது. உரிமம் பெற்ற உரிமதாரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Eri , Eri Liquor Transport, Tanker Truck, Auction
× RELATED தீரஜ் நடிக்கும் பிள்ளையார் சுழி