×

44-ஆவது சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டி..: முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 44-ஆவது சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டி (செஸ் ஒலிம்பியாட்) 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெறுகிறது. இதனையொட்டி நெடுஞ்சலைத் துறை மற்றும் பொதுப் பணித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து பொதுப் பணிகள, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ வ.வேலு இன்று (21.07.2022) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதன்படி, நெடுஞ்சலைத் துறை மற்றும் பொதுப் பணித் துறை மூலம் கீழ்கண்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை பன்னாட்டு விமான நிலையம் - மத்திய கைலாஷ் -சோழிங்கநல்லூர் - அக்கரை -  பூஞ்சேரி  -  4 பாயின்ட் ஷரட்டான் (வழித்தடம்-1) நீளம் - 57.00 கி.மீ.

பெரிய தெற்கத்திய சாலையில் நடைபெற்று வரும் பணிகள்:

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் பெரிய தெற்கத்திய சாலையில் விமான நிலையம் முதல் சின்னமலை வரை 10.10 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.10.70 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் விமான நிலையம் எதிரே உள்ள சாலை மேம்பாலத்தில் பசுமை பூங்கா அமைத்து அழகு படுத்தும் பணி ரூ.96.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், திட்டம் சாரா பணியின் கீழ் நெடுஞ்சாலை பூங்காவில் செயற்கை நீரூற்று மற்றும் “வணக்கம் சென்னை” பதாகை அமைக்கும் பணி ரூ.47.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சாலை வரையரைக் கோடு மற்றும் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்கும் பணி ரூ25.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

இராஜீவ் காந்தி சாலையில் நடைபெற்று வரும் பணிகள்:

மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரையிலான 20.2 கி.மீ. நீள சாலையில் மையத்தடுப்பானில் வண்ணம் பூச்சு பணி ரூ.85.00 இலட்சம் செலவிலும் சாலை பாதை வரையரைக் கோடிடும் பணி (Lane Marking) ரூ.160.00 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வருகின்றன.இந்த சாலையில் அமைந்துள்ள  14  சாலை பாதசாரிகள் நடைபாதைகள் ரூ.58 லட்சம் செலவில் வண்ணம் பூச்சு செய்யும் பணி எடுத்துக் கொள்ளப்பட்டு நடைபெற்று வருகிறது.கிழக்கு கடற்கரை சாலையினை இணைக்கும் 2.4 கி.மீ. நீள சாலையில் 1 கி.மீ. நீளத்திற்கு ரூ.120 லட்சத்தில் சாலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிழக்கு கடற்கரை சாலை (கி.மீ. 22/3-57/0) - 34.7 கி.மீ. (அக்கரை முதல் பூஞ்சேரி வரை) நடைபெற்று வரும் பணிகள்:

மகாபலிபுரம் முதல் பூஞ்சேரி வரையிலான 2.4 கி.மீ. நீளசாலை ரூ.189 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.அக்கரை முதல் மகாபலிபுரம் வரையில் சாலை மையத்தடுப்பில் வண்ணம் பூசுதல், சாலைப்பாதை வரையரைக் கோடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அமைத்தல், 55 சோலார் எச்சரிக்கை சமிக்ஞை விளக்குகள் அமைத்தல் மற்றும் சாலை புருவங்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.499 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.சாலையில் நகரப் பகுதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் மற்றும் உயர்மின் கோபுர விளக்குகள் அனைத்தும் ரூ.80 லட்சம் செலவில் சரி செய்யப்பட்டு வருகின்றது.சென்னை பன்னாட்டு விமான நிலையம் - பல்லாவரம் -  துரைப்பாக்கம் -சோழிங்கநல்லூர் - கேளம்பாக்கம் - பூஞ்சேரி - 4 பாயின்ட் ஷரட்டான்  (வழித்தடம் -2) நீளம் - 57.00 கி.மீ.

பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் நடைபெற்று வரும் பணிகள்:

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் பல்லாவரம் முதல் துரைப்பாக்கம் வரை 5.85 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.இச்சாலையில் 10.00 கி.மீ நீளத்திற்கு சாலை வரையரைக் கோடு, சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பெரிய தகவல் பலகைகள் அமைக்க ரூ.111.40 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும், திட்டம் சாரா பணியின் கீழ் மைய தடுப்புச் சுவருக்கு கருப்பு வெள்ளையடித்தல், பசுமை செடிகள் வளர்த்தல், சாலையோரம் உள்ள மண்குவியல்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் ரூ.48.80 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

இராஜீவ்காந்தி சாலையில் (சென்னை மாமல்லபுரம் சாலை (வழி) திருப்போரூர்) சிறுசேரி முதல் பூஞ்சேரி வரை நடைபெற்று வரும் பணிகள்:

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் கேளம்பாக்கம் முதல் திருப்போரூர் வரை 4.70 கி.மீ. நீளத்திற்கு ரூ.6.18 கோடி மதிப்பீட்டில் சாலையை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலையில் திட்டம் சாரா பணியின் கீழ் சிறுசேரி முதல் திருப்போரூர் வரை பழுதடைந்த உயரம் குறைந்த மைய தடுப்புச் சுவருக்கு மாற்றாக பசுமைச் செடிகள் அமைக்க மைய தடுப்பான்கள் அமைக்கும் பணி ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.இச்சாலையில் திட்டம் சாரா பணியின் கீழ் 1.00 கி.மீ. நீளத்திற்கு பழுதடைந்த ஓடுதளத்தினை பழுது பார்த்தல் பணி ரூ.38.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.திருப்போரூர் முதல் பூஞ்சேரி வரை 10.00 கி.மீ. நீளத்திற்கு மத்திய தடுப்புச் சுவர் பழுது பார்த்தல், வர்ணம் அடித்தல் மற்றும் மண் புருவங்களை பழுதுபார்த்தல் பணிகள் ரூ.50.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

மாமல்லபுரம் நகரில் நடைபெற்று வரும் திட்டம் சாரா பணிகள்...

* மாமல்லபுரம் நகரில் 800 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் ரூ.120.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன.

* மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதி சாலை 400 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை பழுதுபார்த்தல் மற்றும் கிரானைட் கற்கள் அமைக்கும் பணிகள் ரூ.41.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

* மாமல்லபுரம் சிற்பக் கல்லூரி சாலையில் 300 மீட்டர் நீளத்திற்கு பேவர் பிளாக் அமைக்கும் பணி ரூ.5.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

* மாமல்லபுரம் கடற்கரை கோயில் சாலையில் 225 மீட்டர் நீளத்திற்கு வரை பேவர்பிளாக் அமைக்கும் பணி ரூ.5.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

* மாமல்லபுரம் ஐந்துரத சாலையில் 300 மீட்டர் நீளத்திற்கு நடைபாதை பழுது பார்த்தல் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல் பணி ரூ.15.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட பணிகள் அனைத்தும் நெடுஞ்சாலைத் துறையின் உள்ஒதுக்கீட்டின் கீழ் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகள் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திட்டப் பணிகள்                 -     ரூ.30.77 கோடி
திட்டம் சாரா பணிகள்     -    ரூ.8.28 கோடி
TNRDC நிதி                            -    ரூ12.51 கோடி
மொத்தம்                              -    ரூ 51.56 கோடி
பொதுப் பணித் துறை      -    மொத்த மதிப்பீடு ரூ.9.60 கோடி

சிவில் பணிகள்:
5.75 ஏக்கர் பரப்பளவில் 100 பேருந்துகள் மற்றும் 50 கார்கள் நிறுத்த இடவசதி. வாகன நிறுத்துமிடத்தில் மழைநீர் தேங்காவண்ணம் வடிகால் வசதி. வாகன ஓட்டுனர் ஓய்வு அறை, கழிவறை வசதிகள். விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பு சோதனை மையம். மருத்துவ அவசர சிகிச்சைக்காக மருத்துவ அறை. ஊடகம் மற்றும் பார்வையாளர்கள் வாகன நிறுத்துமிட பாதுகாப்பு சோதனை பகுதி.


Tags : 44th International Chess Tournament ,Minister ,AV ,Velu , 44th International Chess Tournament..: Minister AV Velu inspects the development work in person
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...