×

சென்னையிலுள்ள 86 குடியிருப்போர் நலச்சங்கம், 115 குடிசை பகுதிகளில் காவல்துறை சார்பில் கலந்தாய்வு மற்றும் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கல்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், சென்னையிலுள்ள 86 குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் மற்றும் 115 குடிசை பகுதிகளில் காவல்துறை சார்பில் கலந்தாய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்கவும், பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள்- காவல்துறை நல்லுறவை மேம்படுத்த அவ்வப்போது குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் குடிசை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக,  காவல் ஆணையாளர், குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் கலந்தாய்வு மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (17.07.2022) சென்னை பெருநகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் என 86 இடங்களில், குடியிருப்போர் நலச்சங்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

மேலும், சந்தேக நபர்கள் குறித்தும், குற்றச் சம்பவங்கள் குறித்தும் அறிய நேர்ந்தால் உடனே காவல்துறைக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற பல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் காவல்துறை உதவி எண்.100, பெண்கள் உதவி மையம் எண்.1091, முதியோர உதவி மையம் எண்.1253, குழந்தைகள் உதவி மையம் எண்.1098 குறித்து எடுத்துரைத்து, இவற்றை குறித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

நேற்று 86 இடங்களில் குடியிருப்போர் நலச்சங்கத்தினருடன் நடைபெற்ற கலந்தாய்வில் 2,750 நபர்கள் கலந்து கொண்டு, தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். இதே போல, நேற்று (17.07.2022) சென்னை பெருநகரிலுள்ள 115 குடிசைப்பகுதிகளில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இக்கலந்தாய்வில் மொத்தம் 3,762 நபர்கள் கலந்து கொண்டு சந்தேகங்களை கேட்டறிந்து பயனடைந்தனர்.

Tags : Nalasangam ,Chennai , 86 Residents' Welfare Associations in Chennai, 115 Slum Areas Consultations and Safety Advice on behalf of the Police
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...