கொரோனா பாதிப்பை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், கலைஞரின் 99வது பிறந்தநாள் விழா மற்றும் தெருமுனை பிரசார கூட்டம் மடிப்பாக்கத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழ்நாட்டில் 1 கோடியே 65 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போட்டு 95 சதவீதத்தை தாண்டுகிறோம். 2வது தடுப்பூசி 87.03 சதவீதம் பேருக்கு போட்டு இருக்கிறோம். இதனால் தமிழ்நாட்டில் கடந்த 4 மாதத்தில் ஒரு உயிரிழப்பு கூட இல்லை. கொரேனா பாதிப்புக்கு தீர்வு தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான். 1, 2 தவணை தடுப்பூசி போட்டு இருக்கோம். பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. ஒன்றிய அமைச்சருடன் ஜூம் மீட்டிங்கில் பேச வாய்ப்பு கிடைத்தபோது பூஸ்டர் தடுப்பூசி குறித்து பேசியதால் பூஸ்டர் தடுப்பூசியை 75 நாட்களுக்கு இலவசமாக போட அனுமதித்துள்ளது. எனவே, இவற்றை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.

Related Stories: