சென்னை: சென்னை விமான நிலையத்தில் சீா்ப்படுத்தப்பட்ட ப்ராவோ ஓடுபாதையில் இன்று முதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ப்ராவோ ஓடுபாதை வலைவாக இருந்ததால் முதன்மை ஓடுபாதைக்கு விமானம் வருவதற்கு கூடுதல் நேரம் பிடித்தது. இதனால், எாிப்பொருள் அதிகமாக செலவானது. இதன் காரணமாக ப்ராவோ ஓடுபாதை நேராக்கப்பட்டது. 90 சதவீகித உள்நாட்டு சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து நடைப்பெற்று வரும் முதன்மை ஓடுபாதைக்கு இணையானதாக ப்ராவோ ஓடுபாதை இருக்கும். சீா்படுத்தப்பட்ட ப்ராவோ ஓடுபாதையில் இன்று முதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
சீா்படுத்தப்பட்ட ஓடுபாதையால் விமானங்களை இயக்குவது துாிதபடுத்துவதோடு, போக்குவரத்து நெருக்கடி நேரங்களில் விமானங்களின் இயக்கம் தாமதமாவது தவிர்க்கப்படும். ப்ராவோ ஓடுபாதை செயல்பாட்டுக்கு வரும் நிலையில் வெளிச்செல்லும் விரைவு ஓடுபாதை ஒன்று மற்றும் இரண்டுகான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இது நிறைவடைந்த பின் மணிக்கு 36 விமானங்கள் இயக்கம் என்பது மணிக்கு 45 முதல் 50 வரை அதிகாிக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தொிவித்துள்ளனா்.