×

நொய்யல் ஆற்றில் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டதன் காரணமாக ஓராண்டுக்கு பிறகு நிரம்பிய சித்திரைசாவடி அணை

கோவை: நொய்யல் ஆற்றில் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டதன் காரணமாக ஓராண்டுக்கு பிறகு சித்திரைசாவடி அணை நிரம்பியுள்ளது. மேற்குதொடற்சி மலை மற்றும் சிறுவாணி ஆறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அடைமழை பொலிந்து வருவதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப் பேருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓராண்டுக்கு பிறகு சித்திரைசாவடி அணை நிரம்பியுள்ளது.

நொய்யல் ஆற்றின் மிக முக்கியமான நீர் ஆதாரம் என்பது சிறுவாணி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளாக உள்ளது. அங்கு அடைமழை பொழியும் நேரங்களில் சித்திரைசாவடி அணை நிரம்பும். அதேபோல் நொய்யல் ஆற்றில்வெள்ள பேருக்கு ஏற்பட்டு திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏறி குளங்கள் நிரம்ப கூடும். இதனால் இங்குள்ள விவசாயிக மட்டும் அல்லாமல் இங்குள்ள  பொதுமக்களுக்கும் இது பயனளிக்கும்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக நிறைந்த சித்திரைசாவடி அணையில் சமீபகாலமாக தண்ணீர் குறைந்திருந்தது. இந்த சூழலில் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பொலிந்து வருவதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அப்பகுதிக்கு சென்று செல்பி எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறை சார்பில்  அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்னும் இரண்டு தினங்களுக்கு இந்த பகுதியில் மலை பொழிய வாய்ப்புள்ளதால் கரையோர புதுதிகளில் குடியிருக்க கூடிய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Chitrysawadi dam ,Noel , Noyyal River, Chitraisavadi Dam for Flooding
× RELATED 20 ஆண்டுகளாக நொய்யல் ஆற்றை கடக்க பரிசல் பயணம்: பாலம் அமைக்க கோரிக்கை