×

வில்லியனூரில் நாளை வரதராஜபெருமாள் கோயில் தேரோட்டம்

வில்லியனூர்: வில்லியனூர் தென்கலை வரதராஜபெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் கடந்த 9ம் தேதி கருட சேவையும், நேற்று திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை காலை 6 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து 16ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், இறுதி நாளான 17ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற்று விழா நிறைவடைகிறது.  

இந்நிலையில், இன்று தேர் திருவிழாவுக்கான பணிகள் தீவிரமாக நடந்தது. தேருக்கு வர்ணம் பூசப்பட்டு, வடம் கயிறு பொருத்தப்பட்டு தாயார் நிலையில் உள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் சிறப்பு அலுவலர் ராமதாஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.  கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடம் தேர் திருவிழா நடைபெறுவதால் பொதுமக்கள், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Varadarajaperumal temple ,Willianur , Chariot to Varadarajaperumal temple tomorrow at Willianur
× RELATED ஸ்ரீவரதராஜபெருமாள் கோயிலில் இன்று...