×

அண்ணாநகர் மண்டலத்தில் அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்தது: சுகாதாரத்துறையினர் தகவல்

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள வில்லிவாக்கம், அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை மற்றும் கீழ்ப்பாக்கம், டி.பி சத்திரம், சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று 610ஆக இருந்தது. இதையடுத்து, மேற்கண்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்வு வருகின்றனர்.
குறிப்பாக, அப்பகுதிகளில் வீடு, வீடாக சென்று, அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பாதித்த வீடுகளில் விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டி கண்காணித்து வருகின்றனர். மேலும், கொரோனா தொற்று பாதித்த பகுதிகளை தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து வருகின்றனர். இதன்காரணமாக மேற்கண்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது, 540ஆக தொற்று குறைந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி கூறும்போது, ‘‘அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும். முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி திரிபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். வியாபாரிகள் முகக் கவசம் அணிகிறார்களா என்று கண்காணித்து வருகின்றோம். மேலும், அந்த பகுதிகளில் முகாம் அமைத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போட்டு வருகின்றோம். இதன்காரணமாக,  கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. இன்னும் சுகாதார பணிகளை தீவிரப்படுத்தினால், இந்த மண்டலத்தில் கொரோனா தொற்றை குறைக்க முடியும்’’ என்றார். இதனிடையே, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், மார்க்கெட்டு ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை அலுவலர் உஷா மற்றும் சுகாதார ஆய்வாளர் சக்திவேல் தலைமையில், ஊழியர்கள்  முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வசூலித்து வருகின்றனர்.

Tags : Annanagar , Corona infection has reduced in Annanagar mandal due to the intensive action of the government: Health department informs
× RELATED செல்போனில் பேசியபடி சாலையை கடந்த பெண் பைக் மோதி உயிரிழப்பு