×

மாவீரன் அழகு முத்துகோன் பிறந்தநாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: மாவீரன் அழகு முத்துகோன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் செலுத்தியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மாவீரன் அழகு முத்துக்கோன்-உயிரைவிட மானம் பெரிதெனப் போற்றிய வீரத்தின் அடையாளம்!  18ம் நூற்றாண்டிலேயே விடுதலைக் கனலை மூட்டி, பீரங்கிக்கு உடலைச் சிதறக்கொடுத்து வரலாற்றில் நீங்கா இடமும்-மங்காப் புகழும் கொண்ட அரிமா நெஞ்சம் அவரது! கட்டாலங்குளத்துக் காவிய நாயகன் புகழ் வாழ்க!  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Mahaveeran Kagu Muthukone ,Chief Minister ,M.K.Stalin. , Mahaveeran Kagu Muthukone's birthday; Praise of Chief Minister M.K.Stalin
× RELATED தமிழ் வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு