×

மழையால் வெள்ளப்பெருக்கு கூழாங்கல் ஆற்றில் இறங்க தடை

வால்பாறை : வால்பாறையில் தொடர் மழை பெய்ததால் கூறாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்து உள்ளது. தற்போது அடை மழையாக பெய்து வருகிறது. குறிப்பாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழையாக நீடிக்கிறது. சின்னக்கல்லார், அக்காமலை, சிங்கோனா, பெரியகல்லார் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளது. கூழாங்கல் ஆற்றில் சுமார் 2500 கன அடி நீர் வரத்து உள்ளது. எனவே பொதுமக்கள் இறங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் சோலையார் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று மாலை 3 மணி நிலவரப்படி 165 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 159 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4500 கன அடியாக இருந்தது. சோலையார் மின்நிலையங்கள் இரண்டும் முழு வீச்சில் செயல்படுகிறது.

Tags : Pebble River , Valparai: Due to continuous rain in Valparai, there was a flood in Korangal river. As a result, entry into the river has been banned.
× RELATED கூழாங்கல் ஆற்றில் குளிக்கத் தடை