×

குற்றங்களை தடுக்கும் வகையில் மெரினாவில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணி: போலீஸ் அதிகாரி தகவல்

சென்னை: குற்றங்களை தடுக்கும் வகையில் மெரினா கடற்கரையில் டிரோன்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில்  குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குற்றத்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், மெரினா கடற்கரையில் மக்கள் தண்ணீருக்குள் நுழைவதை தடுக்கவும், கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை ஆளில்லா விமானங்களை அனுப்பும் பணியை மாநகர போலீசார் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் பாஸ்கர் கூறியதாவது: குற்றத்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், மெரினா கடற்கரையில் மக்கள் தண்ணீருக்குள் நுழைவதை தடுக்கவும், கலங்கரை விளக்கம் முதல் எம்ஜிஆர் நினைவிடம் வரை ஆளில்லா விமானங்களை அனுப்பும் பணியை மாநகர போலீசார் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த ஆளில்லா விமானங்களை பயன்படுத்துகிறோம். குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் மெரினா கடற்கரையில் தஞ்சம் அடைவதை தடுக்கும் எங்கள் முயற்சிகளின் ஒரு பகுதி இது. காமராஜர் சாலை மற்றும் மெரினா சர்வீஸ் சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் 8 ரோந்து குழுக்கள் இரண்டு ஷிப்டுகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Marina , To prevent crimes, marina, surveillance by drone,
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...