×

மீண்டும் உயர தொடங்கிய தங்கத்தின் விலை..: சவரனுக்கு ரூ.32 உயர்ந்து, ரூ.37,408-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை நேற்று சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது. ஏதோ ஒரு நாள் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இதனால் நகை வாங்கும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், தங்கம் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதால் ஜூலை 1-ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 856 ரூபாய் உயர்ந்தது. ஜூலை 2-ம் தேதி சவரனுக்கு 56 ரூபாயும் ஜூலை 4-ம் தேதி 48 ரூபாயும் ஜூலை 5-ம் தேதி 56 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,440க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோரை கலக்கத்தில் ஆழ்த்தியது. ஆனால் நேற்றைய தினம் யாரும் எதிர்பார்க்காத வகையில், சவரனுக்கு ரூ.544 குறைந்து, ரூ.37,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதியை அளித்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 உயர்ந்து, ரூ.37,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து,  ரூ.4,676-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 110 காசு உயர்ந்து, ரூ.62.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று ரூ. 544 குறைந்த நிலையில், இன்று ரூ.32 உயர்ந்ததால், நகை பிரியர்கள் சற்று சோகத்தில் உள்ளனர்.


Tags : Sawaran , Gold price starts to rise again..: Sawaran rises by Rs 32 to sell at Rs 37,408
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!