×

அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு எடப்பாடி உள்பட ஐவர் மீதான வழக்கு தள்ளுபடி

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் மூன்று கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன் ஆகியோரை தண்டிக்க வேண்டும்.

எனவே, மேல்முறையீடு வழக்கில் இவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க அனுமதிக்க வேண்டும்என்று கோரப்பட்டிருந்தது. இந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதை படித்து பார்த்த நீதிபதிகள், மூன்று கூடுதல் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவிட்டார்.


Tags : Ivar ,Edapadi ,Intent Public Commission , AIADMK general committee, contempt of court, Edappadi, case dismissed
× RELATED எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம்