×

தேமுதிக உட்கட்சி தேர்தல் மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: தேமுதிக உட்கட்சி தேர்தல் நடத்துவதற்காக மண்டல பொறுப்பாளர்களை விஜயகாந்த் நியமித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
தேமுதிக அமைப்பு தேர்தல் நடத்துவதற்கு தேமுதிகவின் சட்ட விதிகளின் படி தேர்தல் பணிக்காக மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், அரியலூர், செங்கல்பட்டு மாவட்ட மண்டல பொறுப்பாளராக தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் வி.இளங்கோவன் நியமிக்கப்படுகிறார்.

நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர் மாவட்ட மண்டல பொறுப்பாளராக தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் நியமிக்கப்படுகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட மண்டல பொறுப்பாளராக ேதமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நியமிக்கப்படுகிறார். மதுரை, தேனி, விருதுநகர், சிவங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி மாவட்ட மண்டல பொறுப்பாளராக தேமுதிக துணை ெசயலாளர் பி.பார்த்தசாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMD Constituency ,Vijayakanth , DMD internal election, appointment of regional in-charges, Vijayakanth announcement
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம் கண்டித்து...