×

ஆசாரிபள்ளம் அனந்தன்குளத்தை சுற்றி 500 பனை மர விதைகள் விதைப்பு: ஆணையர் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில்: ஆசாரிபள்ளம் அனந்தன்குளத்தை சுற்றி 500 பனை விதைகள் விதைப்பு பணிகளை ஆணையர் ஆனந்த மோகன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு பனை மர பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பனை மரங்களின் பயன்பாடுகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.

அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பிலும் இதற்கான பணிகள் நடக்கின்றன. அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாரிபள்ளம் அனந்தன்குளத்தில் சுமார் 500 பனை விதைகள் விதைப்பு பணிகள் நேற்று காலை நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இணைந்து விதைகளை மண்ணில் புதைத்தனர். ஆணையர் ஆனந்த் மோகன் இந்த பணியை தொடங்கி வைத்தார்.

இதில் சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் திட கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஆணையர் ஆனந்த மோகன் நேற்று காலை நாகர்கோவில் செட்டித்தெரு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகிறதா? என்பதை பார்வையிட்டார்.

பொதுமக்களிடம் பேசிய அவர்,  மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.  அதை தூய்மை பணியாளர்கள் எளிதில் பிரித்து எடுக்க வசதியாக இருக்கும். மாநகராட்சி சார்பில் தற்போது 10க்கும் மேற்பட்ட இடங்களில் நுண் உரம் செயலாக்க மையம் உள்ளது. மக்கும் குப்பைகள் இங்கு உரமாக மாற்றப்படுகின்றன.

மாநகராட்சியின் திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர். கோட்டார் காவல் நிலைய ரவுண்டானாவில் நடைபெற்ற மெகா தூய்மை பணியையும் ஆணையர் ஆய்வு
செய்தார்.

Tags : Asaripallam ,Ananthankulam , Sowing of 500 palm tree seeds around Asaripallam Ananthankulam: Commissioner inaugurated
× RELATED கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!!