×

பாரதியார் நினைவை போற்றும் வகையில் சொற்பொழிவு மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமைகளைப் புகழ்பாடும் ஓராண்டு தொடர் நிகழ்ச்சிகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இருபத்தோராவது வாரமான நேற்று இதயகீதம் ராமானுஜம் ‘‘பாரதி ஒரு பைந்தமிழ்த் தேர் சாரதி’’ எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து வானவில் பண்பாட்டு மையம் சார்பாக நிருத்யாஞ்சலி கலைப் பள்ளி மற்றும் காவேரி ரமேஷ் குழுவினரின் பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் அண்ணாதுரை வரவேற்றார். வானவில் பண்பாட்டு மைய உறுப்பினர் சாந்தி ஜெகத்ரட்சகன், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.எஸ்.ரமேஷ்  நன்றியுரை ஆற்றினார்.




Tags : Bharatiyar , In honor of the memory of Bharatiyar Discourse and Bharatanatyam show
× RELATED கோவையில் காவலாளியை தாக்கிய ஆண் யானை!!