×

ஈபிஎஸ் பக்கம் தாவிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் : பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 6 ஆக சரிவு!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக சரிந்துள்ளது.அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக கடந்த 14ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்து உள்ளது.  இந்த சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக சரிந்துள்ளது. இன்று காலை வரை 7 மாவட்ட செயலாளர்கள் பன்னீர் செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், ஓபிஎஸ் அவர்களின் தீவிர ஆதரவாளரான சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் ஈபிஎஸ் அணிக்கு தாவியுள்ளார். வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேளதாளத்துடன் 300க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு பழனிசாமி இல்லம் சென்று மாவட்ட செயலாளர் அசோக் ஆதரவு தெரிவித்துள்ளார்.இதனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 6 ஆக சரிந்தது.

அதிமுகவில் நிர்வாகரீதியான 75 மாவட்டங்களில் பெரும்பான்மை, அதாவது 69 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளனர். பன்னீர் செல்வத்திற்கு மாவட்ட செயலாளர்கள் தேனி சையதுகான், குமரி அசோகன், திருச்சி வெல்லமண்டி நடராஜன், தஞ்சாவூர் தெற்கு வைத்தியலிங்கம், தஞ்சை வடக்கு சுப்ரமணி, பெரம்பலூர் ராமச்சந்திரன் மட்டுமே ஆதரவாக உள்ளனர்.இதுதவிர, ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளராக இருந்த மைத்ரேயன் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து மைத்ரேயன் ஆதரவு தெரிவித்தார். 


Tags : OPS ,Bannir , EPS, OPS, Supporter, Panneer Selvam
× RELATED அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த...