×

பழைய கேப்டனாக விஜயகாந்த் கர்ஜிக்க வேண்டும்: ரஜினிகாந்த் டிவிட்

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததை கண்டறிந்த மருத்துவர்கள், அவரது வலது காலில் உள்ள 3 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘என் அருமை நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து, பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பல நடிகர், நடிகைகளும் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Tags : Vijaykanth ,Rajinikanth , Vijaykanth should roar as old captain: Rajinikanth tweet
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...