×

ரெட் கார்டு போட்ட நடிகருக்கு வாய்ப்பு தரும் பிரியதர்ஷன்

திருவனந்தபுரம்: மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான படம் மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம். இது சரித்திர கதை படம். இதில் மோகன்லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் உருவான படமிது. இதேபோல் பிரியதர்ஷன் இந்தியில் ஷில்பா ஷெட்டி நடிப்பில் இயக்கிய ஹங்காமா 2  படம் ரிலீசானது. இந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை. இந்தநிலையில் பிரியதர்ஷன் தற்போது மலையாளத்தில் புதிய படத்திற்கு தயாராகி வருகிறார். இதில் வளர்ந்து வரும் மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் கதாநாயகனாக நடிக்கிறார். பீஸ்ட் படத்தில் நடித்த ஷைன் டாம் சாக்கோ முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெயில் என்ற மலையாள படத்தில் ஷேன் நிகம் நடித்த போது அதன் தயாரிப்பாளருடன் சம்பள பிரச்னையால் மோதிக்கொண்டார்.

முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்திற்காக தான் நீளமாக வளர்த்திருந்த தலை முடியை குட்டையாக வெட்டிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஷேன் நிகம். அதன்பிறகு இவருக்கு ரெட் கார்டு போட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது. உடனே தயாரிப்பாளரிடம் வருத்தம் தெரிவித்து அந்த படத்தை அவர் முடித்துக் கொடுத்தார்.இதற்கிடையே விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இவர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரியதர்ஷன் படத்தில் நடிக்க அவர் தேர்வாகியுள்ளார்.

Tags : Priyadarshan , Priyadarshan gives a chance to the actor who got the red card
× RELATED நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!