×

ஆட்டத்த மாத்தலேன்னா அவ்வளவுதான்: ரிஷப்புக்கு கவாஸ்கர் எச்சரிக்கை

மும்பை: தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ள ரிஷப் பன்ட் கடந்த 3 போட்டிகளிலும் சோபிக்கவில்லை. ஒரே மாதிரி அவுட் ஆகி முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள், ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்நிலையில் ரிஷப் ஆட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி வீரரான கவாஸ்கர் கூறியதாவது: பேட்டிங்கில் ரிஷப் பன்ட் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதே இல்லை.

தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் கடந்த 3 முறை அவர் அவுட்டான விதத்திலிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வைடாக வீசப்படும் பந்தை ரிஷப் விரட்டிச்சென்று அடித்து விக்கெட்டை இழக்கிறார். அதுபோன்ற வைடு பந்துகளை அடிப்பதை அவர் தவிர்க்க வேண்டும். தென்ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பந்துவீசி ரிஷப் விக்கெட்டை வீழ்த்துவதில் தெளிவாக இருக்கின்றனர். அந்த திட்டத்தை சிறப்பாக செய்தும் முடிக்கின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துக்கு 10 முறை ரிஷப் ஆட்டமிழந்துள்ளார். அவற்றில் பெரும்பாலான பந்துகள், ரிஷப் ஆடாமல் விட்டிருந்தால் அது வைடாக இருந்திருக்கும். அந்த பந்துகளை அடித்து பவுன்டரி, சிக்சருக்கு விரட்டும் பவரும் அவரிடம் இல்லை. ஒரே தொடரில் ஒரே மாதிரி பலமுறை அவுட்டாவது ரிஷப்பின் கேரியருக்கு உகந்ததல்ல என்று கூறி உள்ளார்.

Tags : Matthalenna ,Kavaskar ,Rishop , Game Matalenna is just that: Gavaskar warns Rishabh
× RELATED காந்தாரா ரிஷப் ஷெட்டியின் பான் இந்தியா படம்