×

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே புதர் மண்டிய நடைபாதை

பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகருகே அமைந்துள்ளன. பெரம்பூரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், பேருந்து மூலம் பெரம்பூர் வந்து, பின்னர் ரயில் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்திற்கும், ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில்வேக்கு சொந்தமான இடம் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான நடைபாதை உள்ளது.இந்த பகுதிகளில் செடி கொடிகள் வளர்ந்துள்ளதால், அங்கு விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த நடைபாதை பகுதியில் பாம்பு ஒன்று இறந்து கிடந்தது. இதேபோல், நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் பேருந்து நிலையம் எதிரே 2 பாம்புகள் இறந்து கிடந்தன. இவை இரண்டும் மண் பாம்புகள். முட்புதரில் இருந்து வெளியே வரும்போது வாகனத்தில் அடிபட்டு இறந்துள்ளன. தொடர்ந்து அந்த பகுதியில் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து பெரம்பூர் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நடைபாதையில் உள்ள செடி கொடிகளை அகற்றிவிட்டு, நடைபாதையை தூய்மைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bush Hill Pavement ,Perampur Railway Station , Shrubby walkway near Perambur Railway Station
× RELATED பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கற்களை...