×

ஒருவரையொருவர் மதித்து வாழ வேண்டும்: நுபுர் சர்மா விவகாரத்தில் சீனா கருத்து

பீஜிங்: நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக நீண்ட நாட்களுக்கு பின்னர் சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக, பல நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது சீனாவும் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பினிடம், முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்களால் உலகமெங்கும் உள்ள இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இவ்விவகாரம் குறித்து சீனாவின் கருத்து என்ன? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறுகையில், ‘நுபுர் சர்மா விவகாரம் தொடர்பான செய்திகளை கவனித்து வருகிறோம். அங்குள்ள நிலைமை சரியான முறையில் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். பல்வேறு நாகரிகங்களும், மதங்களும் ஒருவரையொருவர் மதித்து வாழ வேண்டும் என்றே கூறுகிறது. சீனாவும் அதனையே நம்புகிறது.

ஒருவரின் சொந்த நாகரீகத்திற்கும் மற்ற நாகரிகங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை நன்கு புரிந்துகொள்வது மற்றும் நாகரிகங்களுக்கிடையில் பரிமாற்றங்கள், கருத்துகள் மற்றும் இணக்கமான வாழ்வை மேம்படுத்துவது முக்கியம்’ என்று கூறினார்.

Tags : China ,Nupur ,Sharma , We must live respecting each other, Nupur Sharma, China opinion
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்