×

உண்ணிகள் மூலமாக பரவும் புதுவகை காய்ச்சலால் 2 பேர் உயிரிழந்து இருப்பது கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: உண்ணிகள் மூலமாக பரவும் புதுவகை காய்ச்சலால் கேரளாவில் 2 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதிகளின் ஒன்றான வர்தளவை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த வரம் காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை பலனின்றி 8-ம் தேதி உயிரிழந்துவிட்டார்.

அவரது ரத்தத்தை சோதனையிட்ட மருத்துவர்கள்; அவர் (Lyme disease) என படும் உண்ணி காய்ச்சல் நொய்யல் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர். விலங்குகளின் உடலில் வாழும் ஒட்டுண்ணி மூலமாக பாக்டீரியா தொற்று பரவி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை அடுத்து சிறுமி வசித்த பகுதியில் சுகாதார துறையினர் ஆய்வு செய்து வந்தனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் உண்ணி காய்ச்சல் நோயால் உயிரிழந்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிதா என்ற அந்த பெண் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இறப்பதற்கு முன்பு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையில் அவருக்கு உண்ணி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்த சுவிதா சிறுநீரக பிரச்சனைக்காக தமிழகத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவர்.

திருவனந்தபுரத்தில் உண்ணி காய்ச்சல் 2 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில் புறநகர் பகுதிகளான பாரசல்ல, வறுகள்ல உள்ளிட்ட இடங்களில் சுகாதார துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். புதிய வகை பாக்டீரியா தொற்றால் 2 பேர் உயிரிழந்து இருப்பது திருவனந்தபுரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kerala , Two deaths due to tick-borne disease in Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...