×

நாபலூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட நாபலூர் ஊராட்சி குன்னத்தூர் கிராமத்தில் தொம்பரை காலனி, மேட்டு காலனி, பழைய காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிப்பவர்கள் அனைவரும் விவசாய கூலித்தொழில் மற்றும் ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதிகளில் திருவாலங்காடு ஒன்றியம் மூலமும், ஊராட்சி நிர்வாகம் மூலமும் சாலைகள், கழிவுநீர் கால்வாய்கள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை ஊராட்சி நிர்வாகம் மூலம் செய்து வரப்படுகிறது.

தற்போது இந்த ஊராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து அந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீருடன் கலந்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவருக்கு கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.  இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு கடந்த 3 மாதமாக கோரிக்கை மனுக்கள் அளித்தும் அதன் மீதும் நடவடிக்கை இல்லை. மேலும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. சாலைகளில் புதர்கள் மண்டி உள்ளன. விளக்குகள் எரிவதில்லை. பல இடங்களில் சிமென்ட் சாலைகள் உடைந்து சின்னா பின்னமாக உள்ளது. இதனால் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பழைய காலனி, மேட்டு காலனி இணைப்புச் சாலைகள் ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளது.

மேலும் லட்சுமாபுரத்திலிருந்து பழைய காலனிக்கு செல்லும் இணைப்பு சாலையிலும் ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளது. மின்விளக்கு வசதிகள் இல்லை. இந்த பகுதியில் ஊனமுற்றோர், முதியோர் உதவித்தொகை கேட்டு பல நாட்களாக மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் முதியோர் உதவித்தொகை பெறுவதில் முதல் அனைத்து அடிப்படை தேவைகளை பெறுவது வரை அந்த பகுதியினர் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி இந்த கிராமத்திற்கு அடிப்படை தேவைகளை செய்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Nabalur panchayat , Nabalur Panchayat, Infrastructure, People's Suffering, Action
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து