×

காமன்வெல்த் தகுதிசுற்று பாக்சிங் காயத்தால் விலகினார் மேரிகோம்

புதுடெல்லி: காமன்வெல்த் தகுதிசுற்று பாக்சிங் போட்டியின் அரையிறுதியில் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை மேரி கோம், காயம் காரணமாக விலகினார்.6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாதனையாளரான மேரி கோம் (39 வயது, மணிப்பூர்), டெல்லியில் நேற்று நடந்த மகளிர் 48 கிலோ எடை பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் அரியானாவின் நீத்துவுடன் மோதினார். இந்த போட்டியின் முதல் ரவுண்டிலேயே மேரி கோம் தடுமாறி கீழே விழுந்ததால் காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போட்டியில் இருந்து அவர் விலகினார். நடக்கக் கூட முடியாமல் சிரமப்பட்ட அவரை களத்தில் இருந்து தூக்கிச் செல்ல நேரிட்டது. மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், பர்மிங்காமில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மேரி கோம் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

Tags : Maricom ,Commonwealth , Maricom withdraws from Commonwealth Games qualifying due to injury
× RELATED தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற...