×

நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா: 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சென்

ஸ்டாவன்ஞர்: நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்ஞானந்தா 3ம் இடம் பிடித்தார். 12வது நார்வே செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவன்ஞர் நகரில் நடைப்பெற்றது. இதில் 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 10 சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை பட்டத்தை வெல்வர்.இந்நிலையில் இந்த தொடரின் ஆண்கள் பிரிவின் கடைசி சுற்றில் முன்னணி வீரரான நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சென் அமெரிக்காவின் பேபியானோ கரோனாவிற்கு எதிராக மோதினார். இந்த போட்டி கிளாசிக்கல் கேமில் டிரா ஆகி ஆர்கமெடானுக்கு சென்றது.

இதில் அபாரமாக செயல்பட்ட கார்ல்சென் பேபியானோ கரோனாவை வீழ்த்தினார்.இந்த வெற்றியின் மூலம் இவரது ஒட்டுமொத்த புள்ளி எண்ணிக்கை 17.5 ஆக உயர்ந்தது. இதன் மூலம் நார்வே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கார்ல்சென் 6வது முறையாக கைப்பற்றினார். நகமுரா 15.5 புள்ளிகளுடன் 2வது இடமும், இந்தியாவின் பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3வது இடமும் பிடித்தனர். மகளிர் பிரிவில் சீனாவின் ஜு வென்ஜுன் 19 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிர் பிரிவில் இந்தியாவின் வைஷாலி 12.5 புள்ளிகளுடன் 4-வது இடமும், கொனேரு ஹம்பி 10 புள்ளிகளுடன் 5-வது இடமும் பிடித்தார்கள்.

The post நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா: 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் மேக்னஸ் கார்ல்சென் appeared first on Dinakaran.

Tags : Pragnananda ,Norwegian Chess Championship ,Magnus Karlsen ,Stavanger ,Pragnyananda ,Norway Chess Championship ,12th Norway Chess Tournament ,Dinakaran ,
× RELATED டாப்-10 தரவரிசையில் நுழைந்த செஸ் வீரர்...