×

கோயில் திருப்பணிக்காக அனுமதியின்றி ரூ.50 லட்சம் நிதி வசூல் கார்த்தி கோபிநாத்தின் வங்கிக்கணக்கு விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத்தின் தனிப்பட்ட வங்கிக்கணக்கு விவரங்களை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, அதை கோயில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தியதாக பியூஷ் மற்றும் கோலில்ன் செயல் அலுவலர் ஆகியோர் பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் கோபிநாத் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், பூந்தமல்லி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காவல்துறையும், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத்தும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில்  வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் ஆஜராகி, கார்த்திக் கோபிநாத் மீது 5 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் கடைசி வழக்கில் தான் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரை காவலில் வைத்து விசாரிப்பது அவசியம். தனிப்பட்ட வங்கிக்கணக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோயிலுக்கு நன்கொடை வசூலிக்க தொடங்கியதும் அவரது வங்கிக்கணக்கில் கூடுதல் பணம் வந்துள்ளது என்று வாதிட்டார்.

கார்த்திக் கோபிநாத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகவாச்சாரி, பணம் கொடுத்தவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை. பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் படி 3 மணி நேரம் விசாரணை நடத்தி, எந்த தவறும் செய்யவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கார்த்திக் கோபிநாத் அவருடைய தனிப்பட்ட வங்கிக்கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது நாளை (இன்று) பூந்தமல்லி நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கோயிலுக்கு நன்கொடை வசூலிக்க தொடங்கியதும் அவரது வங்கிக் கணக்கில் கூடுதல் பணம் வந்துள்ளது.

Tags : Karthi Gopinath ,Chennai High Court , Chennai High Court orders filing of Rs 50 lakh in Karthi Gopinath's bank account details without permission for temple restoration
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...