×

ஆதம்பாக்கம் ஏரி கரைக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் ஏரி மற்றும் ஏரிக்கரையினை ரூ.8.25 கோடி செலவில் மேம்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் என்.சந்திரன், கிண்டி வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்த்தினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், மின்வாரிய கோட்ட பொறியாளர் கணபதி, மண்டல உதவி கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது, `ஆதம்பாக்கம் ஏரி மற்றும் ஏரிக்கரையை மேம்படுத்தி பறவைகள் சரணாலயத்துடன் அழகுபடுத்த கடந்த ஆண்டு சூழல் மற்றும் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை செய்ய முடியாதபடி வர்த்தக நிறுவனம் உள்பட 118 ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலமுறை எச்சரித்தும் அதிகாரிகள் பட்டா வழங்கியுள்ளனர். அந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும். இந்த மேம்பாட்டு பணிகளை வருவாய்த் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் விரைவில் தொடங்க வேண்டும்’ என்றார்.

Tags : Adambakkam Lake ,Minister ,Thamo Anparasan , Strict action against officials who issued lease to Adambakkam Lake: Minister Thamo Anparasan warns
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...