×

சுல்தான்பேட்டை அருகே ஓடும் பஸ்சிலிருந்து விழுந்து பெண் பியூட்டீசியன் சாவு

சூலூர்: பொள்ளாச்சி ராஜா மில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி (37). பியூட்டீசியன். இவர் நேற்று ஈரோட்டில் நடக்க இருந்த ஒரு திருமணத்திற்கு மணமகள் அலங்காரம் செய்ய சென்றுள்ளார். இதற்காக நேற்று அதிகாலை 5 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து  ஈரோட்டுக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். பஸ் டிரைவராக பொள்ளாச்சியை சேர்ந்த சிவக்குமாரும், கண்டக்டராக பாபு என்பவரும் இருந்துள்ளனர். டிக்கெட் வாங்கிய சிவசக்தி டிரைவர் இருக்கை பின்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். படிக்கட்டு இருக்கைகள் கோளாறு காரணமாக மூடப்படவில்லை. இந்நிலையில் காலை 6.30 மணிக்கு பஸ் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் சுல்தான்பேட்டை தாசநாய்க்கன்பாளையம் அருகே வந்துகொண்டிருந்தது.

அப்போது சீட்டில் அமர்ந்திருந்த சிவசக்தி முன்புற படிக்கட்டு பகுதிக்கு வந்தார். திடீரென வெளியே விழந்தார். இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பார்த்துள்ளார். அப்போது சிவசக்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருந்தார். தகவலறிந்த சுல்தான்பேட்டை போலீசார் வந்து, சிவசக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பஸ்சில் இருந்து சிவசக்தி தற்கொலை செய்தாரா? அல்லது தவறி விழுந்தாரா என விசாரிக்கின்றனர்.

Tags : Sultanpet , Female beautician dies after falling from bus near Sultanpet
× RELATED பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு...