சீர்காழி அருகே திருநாங்கூரில் 12 சிவபெருமான்களுக்கு திருக்கல்யாண உற்சவம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருநாங்கூர் மதங்காஸ்ரமத்தில் மதங்கரிஷி தவம் செய்யும்போது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து சிவபெருமானை திருமணம் செய்து கொண்டு மதங்க ரிஷிக்கு திருமண கோலத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறு. இதனால் திருநாங்கூரில் 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று நடந்தது. இதையொட்டி 12 சிவபெருமான்களுக்கு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

திருநாங்கூர் அஞ்சனாக சமேத மதங்கீசுவரர், திருக்காட்டுபள்ளி அகிலாண்டேசுவரி சமேத ஆரண்யேசுவரர், திருயோகீசுவரம் யோகாம்பிகை சமேத யோகநாதர், திருசொர்ணபுரம் சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர், திருநாங்கூர் சந்திராசு அம்பாள் சமேத அமிர்தபுரீசுவரர், செம்பதனிருப்பு நற்றுணைநாயகி சமேத நாகநாதர், திருநாங்கூர் நம்பிரியான் சமேத நம்புவார்கன்யர், திருநாங்கூர் காமாட்சி சமேத கைலாசநாதர், திருமேனிக்கூடம் சவுந்தரநாயகி சமேத சுந்தரேசுவரர், பெருந்தோட்டம் அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஐராவதேசுவரர், அன்னப்பன்பேட்டை சுந்தரநாயகி சமேத கலக்காமேசுவரர்,

நயினிபுரம் நளினாம்பிகை சமேத நயனவரதேசுவர் ஆகிய சுவாமிகள், திருநாங்கூர் கீழவீதி மதங்கீசுவரர் சுவாமி கோயில் முன்பு எழுந்தருளினர். பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் மதங்க ரிஷிக்கு சுவாமிகள் காட்சி கொடுத்தனர். இதைதொடர்ந்து வேதபாராயணம், திருமுறை பாராயணத்துடன் 12 சிவப்பெருமான்கள் அம்பாள்களுடன் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: