ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் கார் உதிரிபாகம் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சிப்காட் பகுதியில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 120க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். நேற்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் வேலைக்கு சென்றனர். மாலை 6 மணிக்கு பணி முடிந்து ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைக்கும் குடோனில் திடீரென தீப்பற்றி மளமளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

தகவலறிந்து பெரும்புதூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு சென்று, தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையில் காருக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளால், தீ வேகமாக பரவி எரிந்து சாம்பலானது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. புகாரின்படி ஒரகடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: