வேங்கடாசலபதி, சந்துருவுக்கு இயல் விருது: முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு:  ஆய்வாளர், பேராசிரியர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் திறனாளரும், தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் தனித்த எழுத்துநடையை கொண்டவருமான ஆ.இரா.வேங்கடாசலபதி கனடா இலக்கிய தோட்டத்தின் ‘இயல்’ - வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வாகியிருப்பதற்கு எனது வாழ்த்துகள்.

 ‘நானும் நீதிபதி ஆனேன்’ என்ற தன் வரலாற்று நூலுக்காக புனைவிலி பிரிவில் இவ் விருதுக்கு தேர்வாகியுள்ள முன்னாள் நீதியரசர் கே.சந்துருவுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். செந்தமிழை செழுந்தமிழாக்கும் படைப்புகளையும் ஆய்வுகளையும் தொடர்ந்து தருக.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: