×

சரியத் தொடங்கியது தங்கத்தின் விலை!.. ஒரு சவரன் ரூ.288 குறைந்து ரூ.37,824-க்கு விற்பனை

சென்னை: சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும், அட்சய திருதியை தொடர்ந்து இந்த மாத துவக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. பின்னர் 2 நாட்களுக்கு ஏற்றம் அடைந்தாலும், பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை குறைந்து வந்தது. சென்னையில், கடந்த 13ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.544 சரிந்தது. 14ம் தேதி ரூ.144 குறைந்து, சவரன் ரூ.37,896க்கு விற்கப்பட்டது. இருப்பினும் நேற்றைய தினம் ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாரா வகையில் சற்று ஏற்றம் அடைந்து, சவரனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.38,112-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.37,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து, ரூ.4,728-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து, ரூ.65.10க்கு விற்கப்படுகிறது. இதற்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 77.69 ஆக சரிந்துள்ளது.


Tags : Chennai, jewelery gold, razor, Rs 288 less
× RELATED மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை:...