×

சிதிலமடைந்து கிடக்கும் டவுன்-ராமையன்பட்டி சாலை-சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

நெல்லை :  நெல்லை டவுன் தொண்டர்கள் நயினார் சந்நிதி வழியாக செல்லும் சாலை ராமையன்பட்டி விலக்கில் சங்கரன்கோவில் சாலையில் இணைகிறது. டவுனில் இருந்து குருநாதன் கோயில் பேருந்து நிறுத்தம் மற்றும் ராமையன்பட்டி, தச்சநல்லூர் உள்ளிட்ட மாநகர பகுதிக்கும், ரஸ்தா, மானூர் மார்க்கமாக தினசரி  நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ராமையன்பட்டி, தச்சநல்லூர் பகுதி மக்களும் டவுன் பகுதிக்கு வருவதற்கு இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குருநாதன் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து ராமையன்பட்டி விலக்கு வரை பல இடங்களில் சாலையில் சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக இருசக்கரம் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை பார்வையிட்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Tags : Ramayanpatti , Nellai: Nellai Town Volunteers The road passing through Nainar Junction joins the Sankarankoil Road at Ramayanpatti Exemption.
× RELATED லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து